மயிலாடுதுறை மாவட்டத்தில் 738 பள்ளிகள் இன்று திறப்பு: மாணவர்கள் ஆர்வம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 738 பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர்.;
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை முக கவசம் அணிந்து வரும் மாணவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 738 பள்ளிகள் திறப்பு:- பள்ளிக்கு செல்வதில் மாணவர்கள் ஆர்வம்.
கொரோனா 3வது அலையால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று திறக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட்டன. மாவட்டத்திலுள்ள 738 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை முக கவசம் அணிந்து வரும் மாணவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கின்றன.