மயிலாடுதுறை அருகே வழுவூரில் காடுவெட்டி குருவின் 61-வது பிறந்த நாள் விழா
Kaduvetti Guru Birthday-மயிலாடுதுறை அருகே வழுவூரில் காடுவெட்டி குருவின் 61-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
மறைந்த வன்னியர் சங்க தலைவர் குரு உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
Kaduvetti Guru Birthday-மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் 61வது பிறந்த நாள் விழா மயிலாடுதுறை அருகே வழுவூரில் வன்னியர் சங்க தலைவர் வி.ஜி.கே.மணி கண்டன் தலைமையில் அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
வி.ஜி.கே. மணிகண்டன் செய்தியாளரிடம் தெரிவிக்கையில், தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாட முடியாத அளவுக்கு தேர்தல் விதிமுறை,கொரோனா கட்டுப்பாடு உள்ளது. வரும் மே மாதம் காடுவெட்டி குருவின் மறைவு தினத்தை அனுசரிப்பதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி உதவும் என எதிர்பார்க்கிறோம் மேலும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு 10.5 சதவீதம் உச்ச நீதிமன்றம் மூலம் தி.மு.க. தலைவர் பெற்றுத்தருவார் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2