மயிலாடுதுறையைச் சேர்ந்த 6 வயது மாணவி பரதநாட்டியத்தில் உலக சாதனை
மயிலாடுதுறையைச் சேர்ந்த 6 வயது மாணவி பரதநாட்டியத்தில் உலக சாதனை படைத்துள்ளார்.;
பரதநாட்டியத்தில் சாதனை படைத்த பள்ளி மாணவி.
மயிலாடுதுறையைச் சேர்ந்த எம்.ரக்ஷிதா என்கிற 6 வயது மாணவி பரதநாட்டியத்தில் உலக சாதனை புரிந்துள்ளார். மயிலாடுதுறை அபிநயா டான்ஸ் அகாடமியின் குரு உமாமகேஸ்வரியின் மாணவியான ரக்ஷிதா, தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தின் 73 முத்திரைகளையும், வாய் மொழியினாலும், கண் அசைவினாலும், கை முத்திரைகளை பதித்தும் 45 விநாடிகளுக்குள் பதிவு செய்துள்ளார். இதனை பாராட்டி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இன்று காலை 10.15 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இந்த சாதனையை படைத்தார்.