மயிலாடுதுறை: 50- க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் தி.மு.க.வில் ஐக்கியம்
மயிலாடுதுறை அருகே 50- க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.;
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காழியப்பன்நல்லூர், தில்லையாடி ஊராட்சிகள் மற்றும் அனந்தமங்கலம் கிராமத்தில் பா.ம.க. கட்சியில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் விலகி தி.மு க. பிரமுகர் முத்துக்குமார் மூலம் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜி.என்.ரவி, செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், அவைத் தலைவர் மனோகரன், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் செந்தில், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.