குத்தாலம் அருகே 5 மின்மாற்றிகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பு

குத்தாலம் அருகே 5 மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் திறந்து வைத்தார்.;

Update: 2022-01-13 11:10 GMT

புதிய மின்மாற்றிகளை நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் மாந்தை மற்றும் நக்கம்பாடி ஊராட்சிகளில் புதிய மின் மாற்றி துவக்க விழா நடைபெற்றது.

இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு ரூபாய் 30.60 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு ஊராட்சிகளில் நிறுவப்பட்டுள்ள 5 புதிய குறைவழுத்த 100 மற்றும் 63 கிலோ வோல்ட் மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், முருகப்பா, அப்துல்மாலிக், நக்கம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் வெண்ணிலா ராஜ்குமார், மாந்தை ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா திருமுருகன் மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குமரன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், இளநிலை பொறியாளர் ஜான்சிராணி மற்றும் மின் வாரிய அலுவலர்கள் ஊழியர்கள் கிராம முக்கியஸ்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News