சீர்காழி அருகே 5 கோவில்களில் ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம்

சீர்காழி அருகே 5 கோவில்களில் ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-02-07 16:29 GMT

சீர்காழி அருகே சந்தபடுகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்த முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சந்தபடுகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்த முத்து மாரியம்மன்,ஸ்ரீ சந்தான கணபதி, ஸ்ரீ சுப்ரமணியர்,ஸ்ரீ ஆஞ்சநேயர்,ஸ்ரீ குட்டடியாண்டவர் உள்ளிட்ட 5 கோவில்களில்  ஒரே நேரத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.12 ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்ரீ சாந்த முத்து மாரியம்மன் உள்ளிட்ட 5 கோவில்களும் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 4ஆம் தேதி அன்று யாகசாாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றதையடுத்து புனிதநீர் கடங்கள் புறப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழுங்க விமான கலசத்தை வந்தடைந்தது. இதனையடுத்து வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் 5 கோவில்களின் விமான கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாாபிஷேகத்தை செய்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து மகாதீபாராதனை செய்யப்பட்டு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.பின்னர் ஸ்ரீசாந்த முத்து மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்து.பின்னர் பச்சைக்காளி,பவளகாளி ஆட்டம் சிவன் பார்வதி ஆட்டம் நடைபெற்றது.இதில்  கொள்ளிடம், சந்தைபடுகை, திட்டுப்படுகை,நாதல்படுகை உள்ளிட்ட 10 க்கும் மேற்ப்பட்ட கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News