மயிலாடுதுறையில் இருந்து 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் அனுப்பி வைப்பு

மயிலாடுதுறையில் இருந்து 2 ஆயிரம் நெல்மூட்டைகள் அரவைக்காக ரயில் மூலம் கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2021-10-18 10:14 GMT

மயிலாடுதுறையில் இருந்து நெல் மூட்டைகள் ரயிலில் கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 1 லட்சம் ஏக்கரில் குறுவை அறுவடை பணிகள் நிறைவடைந்து தற்போது தாளடி மற்றும் சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை அரவைக்காக அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பப்படுகிறது. 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகளை மயிலாடுதுறையிலிருந்து சரக்கு ரயில்மூலம் அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. அரசு நேரடி கொள்முதல் நிலையங்களிலிருந்து 150 லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட நெல்மூட்டைகளை மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயிலில் ஏற்றி கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News