மயிலாடுதுறை: 18+ கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

Update: 2021-05-24 17:58 GMT

மயிலாடுதுறையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம். 3 இடங்களில் நடைபெற்ற முகாமில் 500க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

கொரோனா தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஒன்றே தீர்வு என்று கூறப்படும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூன்றாம் கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி அண்மையில் தொடங்கியது. இதையடுத்து, 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மயிலாடுதுறையில் இன்று தொடங்கியது. மயிலாடுதுறை கார்காத்த வேளாளர் சங்கக் கட்டடம், காஞ்சி சங்கரவித்யாலயா பள்ளி, ஜெயின் சங்கக் கட்டடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் முகாம்களில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Tags:    

Similar News