சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சீர்காழி அருகே சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-07-13 15:30 GMT

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஐயப்பன் 

மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுக்கா பூதனூர் கிராமத்தைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன் ஐயப்பன். 20 வயதான கூலி தொழிலாளி. இவர் 14 வயது சிறுமி ஒருவருடன் நீண்ட நாட்களாக நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்ற ஐயப்பன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச் சென்றுள்ளார்.

இந்நிலையில் வெளியில் சென்ற சிறுமியின் பெற்றோர் வீட்டில் சிறுமியை காணாமல் பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியை பூதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பூதனூர் கிராமத்தில் ஐயப்பனின் உறவினர்கள் ஒருவரின் வீட்டில் இருந்த சிறுமியை மீட்டு, ஐயப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சிறுமியை மீட்ட காவல்துறையினர் சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

Tags:    

Similar News