விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் இலவச வேளாண் இடுபொருட்கள்
விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் இலவச வேளாண் இடுபொருட்களை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் வழங்கினார்;
விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் இலவச வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேமாத்தூர் ஊராட்சி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக குறுவை தொகுப்பு திட்டம் 2021 மூலம் விவசாயிகளுக்கு இலவச வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார் இதில் நாகை வடக்கு மாவட்ட பொருளாளர் ஜி.என். ரவி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருட்செல்வன் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்