வேட்பாளரை மாற்றக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Update: 2021-03-17 10:15 GMT

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் கோஷ்டிப் பூசல் காரணமாக மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் ஒரு அணியாகவும் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் ஒரு அணி என இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டது.நேற்று மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவரும் முன்னாள் எம்எல்ஏ.,வுமான ராஜகுமார் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் வேட்பாளர் ராஜகுமாரை மாற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவரை வேட்பாளராக அறிவித்தது கண்டனத்துக்குரியது என்று கூறி முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேட்பாளரை மாற்றக்கோரி முழக்கமிட்டனர். மகிளா காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் மரகதவள்ளியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News