மயிலாடுதுறையில் சாலையில் கிடந்த பள்ளம் குறித்து அறிவிப்பு பலகை வைத்த போலீஸ் இன்ஸ்பெக்டரை அனைவரும் பாராட்டினார்கள்.
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பராமரிப்பு குறைபாடு மற்றும் சாலைகளில் திடீர் பள்ளங்கள் உருவாவது வழக்கமான ஒன்று. மயிலாடுதுறை கொத்ததெரு அருகில் கவனிக்கப்படாமல் இருந்த பள்ளத்தை, அவ்வழியே வந்த நாகப்பட்டினம் சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார் , பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க உடனடியாக அறிவிப்பு பலகையை வைத்தார் .அதோடு பாதாள சாக்கடை மேல் மூடி உடைந்து வெறும் கம்பிகள் மட்டுமே தெரிவதை பார்த்த சிவக்குமார் சம்பந்தபட்டவர்களுக்கு தொடர்பு கொண்டு சரி செய்யுமாறு தெரிவித்தார். பொதுமக்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து அறிவிப்பு பலகை வைத்த போலீஸ் இன்ஸ்பெக்டரை அனைவரும் பாராட்டினார்கள்.