அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் மயிலாடுதுறையில் தேமுதிக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் மயிலாடுதுறை தேமுதிக நகர செயலாளர் பன்ணை பாலு தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை தொகுதி பொறுப்பாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் பாக்கம் சிவா, கார்த்திகேயன் குத்தாலம் பேரூராட்சி செயலாளர் பாலா மற்றும் வைத்தியநாதன், அசாருதீன், கிருபானந்தன் கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.