சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி

Update: 2021-03-10 07:45 GMT

மயிலாடுதுறையில் சிவராத்திரியை முன்னிட்டு மாயூர நாதர் ஆலயத்தில் கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு நான்கு நாட்கள் நடைபெறும் 15-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை ஶ்ரீ சண்முகா நாட்டியப் பள்ளி குழுவினரின் பாரம்பரிய வழியில் சிவபக்தி என்ற நாட்டியத்தையும், சேலம் ஐஸ்வர்யா ஐயர் உள்ளம் உருக்கும் ஐயனின் நாமம் என்ற நாட்டியத்தையும், வாலாஜா லாஸ்யா டான்ஸ் அகாடமி குழுவினரின் பக்தனின் பார்வையில் ஆனந்த தாண்டவம் என்ற நாட்டிய நிகழ்வையும், சேலம் ஜதீஸ்வரம் டான்ஸ் அகாடமி குழுவினர் சதங்கை பாடும் ஐயனின் பாதம் என்ற நாட்டியத்தையும், கோவை ராஜாமணியம்மாள் கலை கூட குழுவினரின் கொஞ்சும் சலங்கை நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினர். கண்கவர் நாட்டிய நிகழ்ச்சிகளை ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Tags:    

Similar News