மயிலாடுதுறை அருகே மணல்மேடு பகுதியில் அடையாளம் தெரியாத 5 நாட்கள் ஆன அழுகிய நிலையில் உள்ள சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மயிலாடுதுறை அருகே செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு புளியமரத்தில் இறந்து ஐந்து நாட்கள் ஆன அழுகிய நிலையில் இருந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சடலத்தை மணல்மேடு போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் யார்,எதனால் உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.