கலப்பு மருத்துவ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் இந்திய பல் மருத்துவ சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து அமைதி வழி போராட்டம் நடத்தினார்கள்.
மத்திய அரசு சமீபத்தில் கலப்பு மருத்துவ முறையை அனுமதித்துள்ளது. இந்த மருத்துவ முறைக்கு அலோபதி மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கலப்பு மருத்துவமுறையை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நாகை மாவட்ட பல் மருத்துவர்கள் சங்க செயலாளர் சைஃப் அன்வா் தலைமையில் பங்கேற்ற மருத்துவர்கள் வாயை மூடி மௌனமாக நின்று மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.