போதை புகையிலை விற்பனை: வியாபாரி கைது
சீர்காழி சோதனையில் ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது, தனிப்பிரிவு போலீசார் நடவடிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய கடைவீதி பகுதியில் தடைசெய்யபட்ட போதை புகையைலை பொருட்கள் விற்கபடுவதாக வந்த தகவலின் பெயரில் தனிபிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது கார்த்திக் (32) கடையில் தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது, ஹான்ஸ் 300, வி1 புகையிலை 25, விமல் பாக்கு 1110, சைனிக்கூல் 30 பறிமுதல் செய்து கார்த்திக் தனிபிரிவு போலீசார் கைது செய்து சீர்காழி காவல் நிலையத்தி ஒப்படைத்தனர். இது குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 50 ஆயிரமாகும்.