மயிலாடுதுறை ஆட்சியருக்கு கொரோனா தடுப்பூசி

Update: 2021-02-06 09:00 GMT

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

தமிழகம் முழுவதும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாம் தொடங்கப்பட்டு முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசியை மாவட்டஆட்சியர் லலிதா செலுத்திக் கொண்டார். தொடர்ந்து வருவாய்த்துறை பணியாளர்கள் அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.பின்னர் மாவட்ட ஆட்சியர் லலிதா,செய்தியாளர்களிடம் கூறுகையில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்ட யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் எனவே பொதுமக்கள் அச்சப்படாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News