4 வது நாளாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் சாலை மறியல்

மயிலாடுதுறையில் 4வது நாளாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-05 09:44 GMT

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 4வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்கிராம உதவியாளர், செவிலியர்கள், ஊர்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணை தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில அரசை கண்டித்து முழுக்கம் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமணமண்டபத்தில் அடைத்தனர்.

Tags:    

Similar News