தரங்கம்பாடியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

Update: 2021-01-31 06:30 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செம்பனார்கோவில் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் சந்திரகுமார் முன்னிலையில் பூம்புகார் அதிமுக எம்எல்ஏ., பவுன்ராஜ் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.செம்பனார்கோவில் வட்டாரத்தில் மொத்தம் 140 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. முகாமில் டாக்டர்கள் சிவரஞ்சனி, ஆயிஷா பீவி, செவிலியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News