சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் தொடர் கனமழை
சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிய சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வரண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சீர்காழி, கொள்ளிடம், எடமணல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமாக துவங்கிய மழை படிப்படியாக அதிகரித்தது. கனமழையாக பெய்தது. மேலும் சிறிய இடைவெளியில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் கடந்த புரெவி, நிவர் புயல் மழையில் இருந்து தப்பி, அறுவடைக்கு தயாரான நிலையில் மீதம் உள்ள நெற்பயிர்கள் மழைநீர் மூழ்கி பாதிக்கும் அபயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அதிகபட்சம் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 51.80 மி.மி மழை பதிவாகியுள்ளது.