மயிலாடுதுறையில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது

67 கோடி மதிப்பில் 2.68 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள்

Update: 2021-01-04 07:00 GMT

தமிழக அரசின் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று துவங்கியது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஆராயத்தெரு கூட்டுறவு அங்காடி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா கலந்துகொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 2.68 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.67 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News