மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா! சிக்சர் அடித்த விஜய்

ஒரு நாளுக்கு முன்பே விஜய் வந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஜய் கவனித்துச் சென்றாராம்.

Update: 2024-07-01 03:58 GMT

நடிகர் விஜய் 

விஜய் சமீபத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். அப்போது அவர்கள் மத்தியில் சில கருத்துகளைப் பேசினார். குறிப்பாக போதை ஒழிப்பு பற்றி விழிப்புணர்வை உண்டாக்கினார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்

மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போது போகிற போக்கில் சொல்லாமல் உள்ளத்தில் இருந்தே போதை ஒழிப்பு உறுதி மொழி எல்லாம் எடுக்க வைத்தது பாராட்டுக்குரிய விஷயம் தான். கள்ளக்குறிச்சியில் நடந்த அந்த சம்பவத்திற்காக அங்கு போய் ஆறுதல் சொல்லி விட்டு வந்துள்ளார்.

அதனால் அதை உணர்ந்து தான் இப்படி உறுதியாகச் சொல்லி இருக்கார். சும்மா ஏதோ வந்துட்டோம் என்று நாலு வார்த்தை பேசாமல்  உள்ளத்தில் இருந்து பேசியது வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் மட்டுமல்லாம பல நடிகர்களும் பொறுப்பை உணர்ந்து அவர்களின் ரசிகர்களை வழிநடத்த வேண்டும். 

படித்தவர்கள் அரசியலுக்கு வரணும் என்பது தனி. ஆனால் நிறைய தலைவர்கள் வரணும்னு சொன்னாரு பாருங்க. அதுல அவரும் ஒருத்தர் தான். இது அரசியலுக்கான மேடையல்ல என்றும் அதனால் தான் தலைவர்கள் பற்றி பேசும்போது சிம்பிளாக சொல்லிவிட்டுப் போய்விட்டார். இதைப் புரிந்தவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்று தான் அப்படிப் பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நிறைய பெற்றோர்களும், தாய்மார்களும் அவரது அரசியலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த இடத்தில் உதவித்தொகை கொடுக்கத் தான் வந்திருக்கிறார். இங்கு அரசியல் பேசுவது தவறு. அதே போல பெற்றோர்களும் அப்படி பேசி இருக்கக்கூடாது. அதை அரசியல் பிரச்சாரம் போல கொண்டு வந்து இருக்கக்கூடாது. இது தான் கொஞ்சம் நெருடலாக இருந்தது. 

இந்த நிகழ்ச்சிக்காக நடந்த உணவு வழங்கும் விஷயத்தில் விஜய் மிகவும் அக்கறை காட்டினார். அதே போல வந்து இருந்தவர்களை வழி அனுப்ப தேவையான வாகன ஏற்பாடுகளைச் செய்திருந்ததும் அருமை. ஒரு நாளுக்கு முன்பே விஜய் வந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஜய் கவனித்துச் சென்றாராம். ஆக முதல் நிகழ்ச்சியில் சிக்சர் அடித்து விட்டார் விஜய் என பேசிக்கொள்கின்றனர்.

Tags:    

Similar News