மதுரையில் வடக்கு தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் சரவணன் திமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை, அதிமுக தேர்தல் அறிக்கை என இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கை அளித்துள்ள நிலையில் அவர் தனது தொகுதிக்கான சிறப்பு தேர்தல் அறிக்கை ஒன்றை இன்று மாலை வெளியிட்டார். அதில் தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து தான் வெற்றிபெற்றால் இதைப்பற்றிய தீர்த்து வைப்பேன் என தெரிவித்தார்.
அதில் தமிழக அரசு சார்பில் குடிமராமத்து பணிகள் நடைபெற்ற செல்லூர் கண்மாயில் சிறப்பாக குடிமராமத்து பணி நடைபெற்று உள்ளது என அதிமுக சார்பிலும், குடிமராமத்து பணிகள் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் உள்ள நிலையில் அதே கண்மாயை மீண்டும் சீர் செய்வேன் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கையில், முறைகேடு கொடுத்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள். கண்மாயை சுத்தம் செய்து நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு பாடுபடுவேன் அடைப்பு சரிசெய்து நீர் நிரப்ப நடவடிக்கை எடுப்பேன் மற்ற பிரச்சனைகள் என்ன என்பது நாம் உள்ளே சென்று பணி தொடங்கும் போது தெரிய வரும் அவற்றை சரி செய்யப்படும் என மழுப்பலாக பதிலளித்தார். சசிகலா மரணம் குறித்து வழக்கு தொடர்ந்து தொடர்பான கேள்விக்கு அது பொய்யான விஷயம் வழக்கு அந்த நேரம் தொடங்கப்பட்டது, அது ஒரு காலகட்டம். அதில் நீதிமன்றம் சசிகலா தினகரன் தெரிவிக்கின்றனர். தற்போது எடப்பாடி தலைமையிலும் துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என சம்பந்தம் இல்லாமல் பதில் தெரிவித்தார். நீர்நிலைகளில் கழிவு நீர் தேங்குவதை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது சில இடங்களில் நான் சிறுவர்களிடம் கேள்வி கேட்பேன் என்னை தெரிகிறதா என்று உடனே அவர்கள் சொல்லுவார்கள் டாக்டர் சரவணன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றீர்கள் என தெரிவிப்பார்கள். எனவே தாமரை சின்னம் தற்போது இந்த தொகுதியில் ரீச்சாகி உள்ளது. எங்கள் அனைவரையும் பார்த்தாலே தெரியும். பிரதமர் மோடி பிரச்சாரம் அல்டிமேட் அவரது பிரச்சாரத்திற்கு பின்பு வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. மோடி பிரச்சாரத்திற்கு வந்தால் எங்களுக்கு வெற்றி என திமுகவில் சிலர் கூறுவது அரசியல் நோக்கத்திற்காக, வடக்கு சட்டமன்ற தொகுதியின் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் தேதி நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவேன். அப்பொழுது கூட்டணி கட்சிகளுடன் ஒத்துழைப்புடன் அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்துவேன் என்றார். பேட்டியின்போது மத்திய அமைச்சர் வி கே சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.