மதுரை வில்லாபுரம் பூ மார்க்கெட் பகுதியில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களை அழைத்து கொரோனா பரிசோதனை செய்து சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் நேற்றிரவு முதல் இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சுகாதார துறை சார்பாக பாதுகாப்பு நெறிமுறைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், வில்லாபுரம் பூ மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி சார்பாக சுகாதாரத்துறையினர் மாஸ்க் அணியாமல் வந்தவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் கொரோனா இரண்டாம் அலை குறித்தும், மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு அளித்து அனுப்பி வைத்தனர்.