முதல் போக சாகுபடி தொடங்கப்போகுது : வைகை அணையில் தண்ணீர் திறந்தாச்சு..!

தேனி அருகே உள்ள வைகை அணையிலிருந்து, முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது;

Update: 2022-06-03 08:30 GMT

தேனி அருகே உள்ள வைகை அணையிலிருந்து, முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

 தேனி அருகே உள்ள வைகை அணையிலிருந்து, முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஆண்டுதோறும் முதல் போக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடு வழக்கம், அதன்படி, இன்று காலை வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, பி மூர்த்தி ஆகியோர்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டனர். இந்நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ஆட்சியர், மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, வைகை அணையில் உள்ள நீர் மீது, அமைச்சர்கள் மலர் தூவி வழிபட்டனர்.

Tags:    

Similar News