மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் குமார் ராஜினமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Update: 2024-05-05 11:27 GMT

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் ராஜினாமா (கோப்பு படம்)

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2022 ஆம் வருடம் ஏப்ரல் ஒன்றாம் தேதி பேராசிரியர் குமார், பொறுப்பேற்றார். பதவி ஏற்றது முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வு ஊழியர்கள் இடையே பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது.

இந்நிலையில், ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்த 136 பேர் பல்கலைக்கழக நிதி நெருக்கடி காரணம் கூறி,பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், பேராசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கான சம்பளம் ஒரு மாத இடைவெளிக்கு பின் வழங்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் இன்னும் ஒன்றரை வருடம் பதவிகாலம் உள்ள நிலையில் துணைவேந்தராக இருந்த குமார் தனது பதவியை கடந்த 28-ஆம் தேதி ராஜினாமா செய்து ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் குமாரின் ராஜினாமா கடிதத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் இன்று அவரது ராஜினாமாவை ஏற்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் வரும் பத்தாம் தேதி புதிய துணைவேந்தரை தெருத்தெடுப்பதற்காக சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்ட ஒப்புதல் அனுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து, வரும் மே பத்தாம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தர் தேர்தெடுக்க சிண்டிகேட் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News