விக்கிரமங்கலம் அருகே இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிப்பு

Update: 2023-10-16 08:59 GMT

சோழவந்தான் அருகே  தீ வைத்து எரிக்கப்பட்ட டூவீலர்கள்.

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் அருகே கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது கணவன் சில ஆண்டுகளுக்கு முன்பாக மரணம் அடைந்த நிலையில், கீழப்பட்டியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி இருசக்கர வாகனங்கள் இரண்டினை தீ வைத்து எரித்தனர்.

தீ மள மள என எரிந்து ஸ்கூட்டர்கள் முழுவதும் எரிந்து விட்டது. மேலும், சுவரில் மாட்டியிருந்த டைல்ஸ் பெயர்ந்து விழுந்தன. தீ பிடிப்பதை கண்டு அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில்  தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.  பின்பு சிறிது காயங்களுடன் சுமதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து, விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை செய்து தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News