ராணுவ தலைமை தளபதி மறைவுக்கு மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு, மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2021-12-09 07:30 GMT

முப்படை தலைமை தளபதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள். 

இந்தியாவின் முப்படைத்தலைமை தளபதியான பிபின் ராவத், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் கோர விபத்தில் வீர மரணம் அடைந்தார். இதில்,  அவரது மனைவி உள்பட 13 வீரர்கள் உயிரிழந்த சம்பவம், நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர், முப்படை தலைமை தளபதியின் திரு உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.


இதன் ஒரு பகுதியாக, மதுரை காந்தி மியூசியத்தில் காந்தி மியூசியம் மற்றும் பாரதி யுவகேந்திரா அறக்கட்டளை சார்பாக அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் ஜவகர் பாபு தலைமையில், செயலாளர் நந்தாராவ், சமூக ஆர்வலர்கள் நெல்லை பாலு, ஈஷா கரீம் ஆகியோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி, மறைந்த ஜெனரல் பிபின் ராவத்திற்கு நினைவஞ்சலி செலுத்தினர். நிகழ்வு தொடர்பாக செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களும், பிபின் ராவத்தின் திரு உருவ படத்துக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News