உசிலம்பட்டியில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!
உசிலம்பட்டியில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆறாவது நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நிறைவு செய்து நிறுத்தி வைக்கப்பட்ட சுமார் 100 லாரிகளை எடுத்து சென்றனர்.
எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள குவாரிகள் மற்றும் கிரஷர்களில் ஒரு யூனிட் க்கு தலா ஆயிரம் ரூபாய் விலை கூடுதலாக உயர்த் தப்பட்டுள்ளது.
இந்த திடீர் விலை உயர்வைக் கண்டித்து , கடந்த 1ஆம் தேதி முதல் இன்று 6 ந் தேதி வரை தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் கட்டிட பொறியாளர் சங்கத்தினர் நாளாவது நாளில் தமிழ்நாடு அரசு கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், காக்கா அமைப்பின் விதிமுறைகளை தளர்த்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த தொடர் போராட்டத்தின் காரணமாக, குவாரி உரிமையாளர்கள் லாரி உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும், எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு மதுரை தேனி மாவட்டங்களில் உள்ள குவாரி உரிமையாளர்கள் ஒரு யூனிட்டுக்கு தலா ஆயிரம் ரூபாய் விலை கூடுதலாக உயர்த்ப்பட்டதை விலை உயர்வை குறைப்பதாகவும், தொடர்ந்து படிப்படியாக குறைப்பதாகவும் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ஆறாவது நாள் டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் தொடர்வேலை நிறுத்த போராட்டம் நிறைவு செய்து போராட்டத்தை கைவிட்டு, நிறுத்தி வைக்கப்பட்ட சுமார் 100 டிப்பர் லாரிகளை எடுத்து சென்றனர்.