உசிலம்பட்டி போலீஸ் நிலையம் முன் வழக்கு தொடர்பாக வந்தவர்கள் அடிதடி

உசிலம்பட்டி போலீஸ் நிலையம் முன் வழக்கு தொடர்பாக ஆஜராக வந்தவர்கள் அடிதடியில் இறங்கினார்கள்.

Update: 2024-06-27 12:12 GMT

உசிலம்பட்டி போலீஸ் நிலையம் முன் அடிதடியில் இறங்கியவர்களை போலீசார் விலக்கி விட்டனர்.

உசிலம்பட்டி அருகே, இளம்பெண்ணை திருமண ஆசை கூறி, இராணுவ வீரர் பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகார் குறித்த விசாரணையின் போது காவல் நிலையம் முன்பே உறவினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரது மகன் இராமன்., இந்திய இராணுவத்தில் ஜம்மு காஷ்மீரில் தற்போது பணியாற்றி வருகிறார்.

இவர் அதே ஊரைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி இளம்பெண்ணான ரேவதி என்பவருடன் நட்பாக பழகி திருமணம் ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மிரட்டி கருவில் இருந்த குழந்தையை கலைக்க வைத்து விட்டு, திருமணம் செய்ய மறுப்பதாக, இளம்பெண் ரேவதி உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு ஆஜராக இராணுவ வீரரான ராமனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவுபடி, இன்று உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, விசாரணைக்காக இராணுவ வீரர் இராமன் ஆஜரானார்.

விசாரணையில் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்தாக கூறப்படுகிறது, இந்த வழக்கு தொடர்பாக இராணுவ வீரர் இராமனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

அப்போது, இராமன் இளம்பெண் வீட்டினரை பார்த்து மிரட்டியதாக கூறி இருபிரிவினரும் காவல் நிலையம் முன்பே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பணியில் இருந்த போலீசார் தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து இராணுவ வீரரை மீட்டு நீதிமன்ற காவலுக்காக அழைத்து சென்றனர்.

காவல் நிலையம் முன்பே இளம்பெண் மற்றும் இராணுவ வீரரின் உறவினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News