சோழவந்தான் அருகே ஆலய திருப்பணி ஆலோசனைக் கூட்டம்

முள்ளிப்பள்ளத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் குறித்த ஆலோசனைகூட்டம் நடந்தது

Update: 2022-05-13 05:45 GMT

முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அக்கிரஹாரத்தி பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிக்காக ஆலோசனைக் கூட்டம் 

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அக்கிரஹாரத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்  கும்பாபிஷேக பணிக்காக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலைத்துறை மற்றும் முள்ளிப்பள்ளம் கிராம பொதுமக்கள் இணைந்து திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி இளமதி மற்றும் திருப்பணி கமிட்டி தலைவராக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.கே கோபாலன், பொருளாளராக ஆர்.வி. ராமச்சந்திரன், திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் கேபிள் ராஜா, முத்துராமலிங்கம், மீனாட்சி சுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கரன், ராஜேந்திரன் பழனிவேல், சக்கரவர்த்தி, மூலக்கடை ஜவகர், நாகு, பழனியாண்டி, ஜேசிபி கார்த்தி, ஞானசேகரன், செல்லப்பா, ரவி, இளங்கோவன் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News