சோழவந்தானில் கோயில் திருவிழா: தடபுடலான அன்னதானத்தில் பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டத்தில் அன்னதானம் நடைபெற்றது.

Update: 2022-06-21 09:45 GMT

அன்னதானத்தை துவக்கி வைத்த கவுன்சிலர் மருது பாண்டியன். 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதினாறாம் நாள் திருவிழாவான தேரோட்டத்தை முன்னிட்டு அறுசுவை அன்னதானத்தை சோழவந்தான் அரிமா சங்கத் தலைவரும் எம்.வி.எம் கலைவாணி பள்ளி தாளாளரும், பேரூராட்சி கவுன்சிலருமான எம். மருது பாண்டியன் துவக்கி வைத்தார். சோழவந்தான் ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News