தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கட்டண உயர்வை கண்டித்து இந்திய மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-08-23 15:07 GMT

நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கட்டண உயர்வை கண்டித்து இந்திய மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கல்விக் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக கண்டித்து இந்திய மாணவர் அமைப்பு சார்பில் மாநிலச் செயலாளர் மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பெண் உள்பட 30- மாணவர்கள் கலந்து கொண்டனர்

எஸ்.எப்.ஐ. மாநிலச் செயலாளர் மாரியப்பன் கூறுகையில், 700 ரூபாய் கடனுக்காக 7000 ரூபாய் வசூலிக்கும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிச் செயலாளர் அரசு விதிமுறைகளை மீறி செயல்படுவதால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Tags:    

Similar News