மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: விஜய பிரபாகரன் கண்டனம்

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு விஜய பிரபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-09-09 14:18 GMT

தேமுதிக விஜய பிராபகரன்.

உசிலம்பட்டியில் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த பி.கே. மூக்கையாத்தேவரின் 45 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் தலைமையிலான நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த பெண்கள் விஜய பிரபாகரனுடன் செல்பி எடுக்க போட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த விஜயபிரபாகரன், பி.கே.மூக்கையாத்தேவரை பற்றி படித்துள்ளேன், ஏழை மக்களின் கல்விக்கு உதவி செய்துள்ளார், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது கச்சத்தீவை மீட்க போராடி உள்ளார். அரசியலில் இருப்பதால் இது போன்ற அரசியல் வரலாற்று தலைவர்களை பற்றி நினைவு கூறுவதும், வணங்குவதும் நல்ல விசயமாக பார்க்கிறேன்.

விருநகர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி நான் தொடர்ந்த வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் பதில் கேட்டிருப்பதை வரவேற்கிறேன். உண்மையான அரசியல் தலைவருக்கு மரியாதை செலுத்த வந்துள்ள இடத்தில் இந்த மாதிரி அறிவிப்பு வந்தது உண்மையிலேயே வரவேற்கிறேன். நிச்சயம் எங்கள் பக்கம் நியாயம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன்.

மீன் பிடிப்பவர்கள் மீது பல கோடி அபராதம் விதிப்பது தவறான விஷயம், மீன் வியாபரிகள் ஏழைகள், அபராதம் விதிப்பது அவர்களை சுட்டுக் கொல்வது உண்மையில் கண்டிக்கதக்கது. இதே போன்று செய்ததால் தான் இலங்கை அரசு எவ்வளவு மோசமான நிலைமைக்கு போனது என தெரியும். மீண்டும் அதே போன்று செய்ய கூடாது. திமுக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு தான் கட்சத்தீவை கொடுத்தார்கள். இலங்கைக்கும், திமுகவிற்கும் பல உள்குத்து இருக்கும் அதை இப்போதைக்கு பேசுவது சரியாக இருக்காது. இருந்தாலும் தமிழ்நாடு அரசு தான் முன்னெடுத்து மீனவ சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும். தேமுதிக மீனவர்களுக்கு எப்போதும் குரல் கொடுப்போம், துணை நிற்கும்.

அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவுயாற்றியது கண்டிக்கத்தக்கது. எங்கள் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயக்காந்த் ஏற்கனவே அறிக்கை கொடுத்துள்ளார் என பேசினார்.

இதில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் கணபதி, தெற்கு மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், நகர் கழகச் செயலாளர் அசோகன், ஒன்றியச் செயலாளர் ஒய் எஸ் டி சமுத்திரபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் பாண்டி, வடக்கு மதுரை மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் சுரேஷ்குமார், கேப்டன் மன்ற செயலாளர் வில்லானி செல்வம், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், நகர் பொருளாளர் அழகுராஜா ,நகர இளைஞரணி தங்கப்பாண்டி, ஏழுமலை சேகர், சேடப்பட்டி ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம், பழனி, மகேந்திரன், ராமர், முருகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News