சோழவந்தான் அருகே புள்ளிப்பள்ளத்தில் சிறப்பு அறுவை சிகிச்சை முகாம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே புள்ளிப் பள்ளத்தில், சிறப்பு அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2022-04-10 00:00 GMT

முள்ளிப்பள்ளத்தில் வேலம்மாள் மருத்துவமனை மற்றும் வி சினிமாஸ் இணைந்து சிறப்பு அறுவை சிகிச்சை முகாமை நடத்தின. 

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில், வி. சினிமாஸ் திரையரங்கம், மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில், சிறப்பு அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. சிறப்பு மருத்துவர்கள் செந்தில்நாதன், சுதிர், வசுமதி,  ஆனந்ததுரை உள்ளிட்ட மருத்துவ வல்லுநர்கள் சிறப்பான சிகிச்சை மற்றும் ஆலோசனை அளித்தனர். காது, மூக்கு ,தொண்டை நிபுணர் நித்தின், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் நிபுணர் கௌதம், பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்தனர். 

மக்கள் தொடர்பு அலுவலர் உமா ஆறுமுகம் ஒருங்கிணைத்தார். இதில், சிறப்பு அறுவை சிகிச்சை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், காப்பீட்டு அடையாள அட்டையின் மூலம் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் முள்ளிப்பள்ளம், தென்கரை மற்றும் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மருத்துவர் செந்தில் நாதன் கூறுகையில், கிராமப்புற மக்கள் பயன்பெற வேண்டும் என்ற பொநோக்கில், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிறுவனர் எம் வி எம் முத்துராமலிங்கம், ஆலோசனையின் பேரில், இங்கே சிறப்பு அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. தொடர்ந்து, மாதந்தோறும் எட்டாம் தேதி சிறப்பு அறுவை சிகிச்சை முகாம் நடைபெறும் என்றார்.

Tags:    

Similar News