உசிலம்பட்டியில் மாணவர்களின் சாலை விழிப்புணர்வு ஊர்வலம்..!
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நாடும் விழா.
உசிலம்பட்டி:
மதுரை, மாவட்டம்,உசிலம்பட்டி அருகே, போக்குவரத்து காவல்துறை சார்பில், பள்ளி மாணவ மாணவிகளுடன் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, செட்டியபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் செளந்திர பாண்டியன், தாலுகா காவல் சார்பு ஆய்வாளர்கள் மதுரை பாண்டி ,முருகன், கலைமுருகன், பள்ளி தலைமையாசிரியர்கள் சரவண கண்ணா மற்றும் சுகந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், கடந்த மாதம் சாலை விபத்தில் உயிரிழந்து உடலுறுப்பு தானம் செய்யப்பட்ட செல்வேந்திரன் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்த விழிப்புணர்வு பேரணியானது, செட்டியபட்டி, அண்ணாநகர், நடுப்பட்டி, நோட்டம்பட்டி, வாசிநகர் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி மாணவ மாணவிகள் பேரணியாக சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும்,இந்த நிகழ்வு ரிலீப் ப்ராஜக்ட்ஸ் இந்தியாவால் நடத்தப்பட்டது.
இன்றைய இளைஞர்களுக்கு சாலைபோக்குவரத்து விதிகளை மதிக்கும் மாண்பு வரவேண்டும். இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தால் அவர்கள்தான் சாலியின் ராஜா என்று எண்ணிக்கொள்கின்றனர். சினிமாக்களில் வரும் ஹீரோக்கள் போல சாகசம் செய்கின்றனர். அதனால் பல வாழவேண்டிய இளைஞர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுளளது. பல பெற்றோர் மகன்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இளைஞர்கள் போக்குவரத்து விதைகளை மதித்து வாகனங்களை இயக்கவேண்டும்.