உசிலம்பட்டி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-07-25 10:00 GMT

உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டம்.

உசிலம்பட்டி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி அய்யப்பன் எம்எல்ஏவை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, கீரிபட்டி கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறையாக பணி வழங்கவில்லை என, கூறப்படுகிறது. இந்த 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி கிராம மக்கள் கீரிபட்டி பாண்டீஸ்வரன் கோவில் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், அவ்வழியாக சென்ற உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பனையும், கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் மற்றும் எம்.எல்.ஏ. அய்யப்பன், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி , 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியலால், உசிலம்பட்டி பாப்பாபட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News