உசிலம்பட்டி அருகே கல்லறை தோட்டத்திற்கு செல்ல பாதை வசதி கோரி சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே கல்லறை தோட்டத்திற்கு செல்ல சாலை வசதி கோரி சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-06-10 05:27 GMT

உசிலம்பட்டியில் ,சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

உசிலம்பட்டியில் கல்லறைக்கு செல்ல பாதை அமைத்து தர கோரி, இறந்தவரின் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பேரையூர் ரோட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்திற்கு செல்ல பாதை இல்லாத நிலை நீடித்து வருகிறது. இந்த கல்லறைக்கு முன்பாக உள்ள மற்றுமொரு கல்லறையின் வழியாக இத்தனை ஆண்டுகளாக சென்று வந்த சூழலில் தற்போது முன் பகுதியில் உள்ள கல்லறையில் சுற்று சுவர் அமைத்து விட்டதால் பின் பகுதியில் உள்ள கல்லறைக்கு செல்ல பாதை இல்லை என கூறப்படுகிறது.,

இந்நிலையில், இன்று உடல்நலக்குறைவு காரணமாக பன்னைப்பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவர் உயிரிழந்த சூழலில், அவரது உடலை எடுத்து செல்ல பாதை அமைத்து தர கோரி இறந்தவரின் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு இறந்தவரின் உடலை சுற்று சுவர் வழியாக அவல நிலையில் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News