சோழவந்தான் உழவன் உணவகத்தில் குடியரசு தினவிழா
குடியரசுதினத்தையொட்டி இந்த உணவகத்தில் தேசியக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது;
சோழவந்தான் உழவன் உணவகத்தில் இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் உழவன் உணவகத்தில் நாட்டின் 73 -வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முள்ளிப்பள்ளம் ஊராட்சி முன்னாள் தலைவர் மார் நாட்டான் தலைமை வகித்தார். உழவன் உணவகம் அமைப்பாளர் போதுமணி முன்னிலை வகித்தார். பேராசிரியர் பழனிச்சாமி கொடியேற்றினார் . ஐக்கிய விவசாய சங்க மாநிலச் செயலாளர் சேது இனிப்புகள் வழங்கினார்.இதில், காங்கிரஸ் பிரமுகர்கள் பழனி, பரமசிவம், முத்துப்பாண்டி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.