மதுரை அருகே மேலக்கால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் தேங்கிய மழைநீர் அகற்றப்படுமா?

மதுரை மாவட்டம், மேலக்கால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்னால் மழை நீர் தேங்கி நின்று நோய்பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-08-12 10:04 GMT

மேலக்கால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தேங்கியுள்ள மழைநீர்.

மதுரை மாவட்டம், மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் மழை நீர் தேங்கி இருப்பதால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது.  நடவடிக்கை எடுக்க பாஜக சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் பாதையில் மழை பெய்தால் மழை நீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நின்று விடுகிறது. இவ்வாறு மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார நிலையத்துக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொசுக்கள் பரவும் என்று அறிவிப்பு விடும் சுகாதார நிலையத்திலேயே மழை நீர் தேங்கி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊருக்கு உபதேசம் செய்யும் சுகாதாரத்துறையின் நிலையே இப்படி என்றால் மக்கள் நிலை எப்படி இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

இவ்வாறு தேங்கிய மழைநீரில் கொசுக்கள் பெருகி நோய்தீர்க்க வரும் நோயாளிகளுக்கு மேலும் நோயை பரப்புதாகவே இருக்கும். அதனால் சுகாதாரத்துறை உடனடி நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றச் செய்யவேண்டும். மேலும் மழைநீர் வடிந்து செல்ல அதற்கான ஏற்பாடுகளையும் செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தவிர, காளியம்மன் கோவில் முன்பாகவும்  கழிவு நீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிமெண்ட் சாலையை  ரோட்டில் இருந்து ஒரே மாதிரியாக நாடக மேடை வரை அமைக்க வேண்டும் என, மேலக்கால் பாஜக சார்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News