சோழவந்தான் பிரளயநாதர் சிவாலய கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா

ராகுகேது பெயர்ச்சியை முன்னிட்டு சோழவந்தான் ஸ்ரீ பிரளயநாதர் சிவாலய கோவிலில் சிறப்பு யாகம் பரிகார பூஜை நடைபெற்றது.;

Update: 2022-03-22 01:28 GMT

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளயநாதர் சிவாலய கோவிலில் சிறப்பு யாகம் பரிகார பூஜை நடைபெற்றது.

ராகுகேது பெயர்ச்சியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளயநாதர் சிவாலய கோவிலில் சிறப்பு யாகம் பரிகார பூஜை. திரளான பக்தர்கள் பங்கேற்பு.

ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயற்சி ஆவதை முன்னிட்டு.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளயநாத திருக்கோவில் சிறப்பு யாகம் நடைபெற்றது. கணபதி பூஜையுடன் துவங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. பக்தர்கள் மேல் புனிதநீர் தெளிக்கப்பட்டது. பரிகார பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.வி.எம். குழும தலைவர் தொழிலதிபர் முத்தையா கலைவாணி பள்ளி தாளாளர் பேரூராட்சி கவுன்சிலர் மருதுபாண்டியன் பள்ளி நிர்வாகி வள்ளிமயில் செய்திருந்தனர்.

Tags:    

Similar News