ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு மதுரை அருகே அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Update: 2024-05-22 09:35 GMT

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை அடக்குவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களில்  உசிலம்பட்டியைச்சேர்ந்த ஜெயராமன் என்பவரும் ஒருவர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த ஜெயராமனுக்கு மக்கள் அதிகார அமைப்பினர் 6 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தியதோடு, மணிமண்டபம் அமைக்கவும், குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க கோரியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவரான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, ஆரியபட்டியைச் சேர்ந்த ஜெயராமனுக்கு இன்று மதுரை மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் அவரது உறவினர்களால் நினைவு தினம் ஆரியபட்டியில் அனுசரிக் கப்பட்டது.

முன்னதாக, ஜெயராமன் திரு உருவ படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மக்கள் அதிகார அமைப்பின் நிர்வாகிகள், மக்கள் அதிகார அமைப்பின் கொடியை ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து, ஜெயராமனுக்கு சொந்த ஊரான ஆரியபட்டியில் மணிமண்டபம் அமைத்து தர வலியுறுத்தியும், துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது வழக்குப் பதிவு செய்து, தண்டனை பெற்று தரகோரியும்  கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News