சம்பளம் வழங்கக்கோரி மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொகுப்பூதிய ஊழியர்கள் போராட்டம்

சம்பளம் வழங்கக்கோரி மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொகுப்பூதிய ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.;

Update: 2021-10-12 13:23 GMT

தரையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொகுப்பூதிய பணியாளர்கள்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாதக் கண்டித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் பணியாற்றும், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக, பல்கலைக் கழக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொகுப்பூதிய பணியாளர்கள் தரையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News