கள்ளர் சீரமைப்பு பள்ளியில் போராட்டம்: திருப்பி அனுப்பப்பட்ட மாணவிகள்

உசிலம்பட்டி கள்ளர் சீரமைப்பு பள்ளியில் போராட்டம் நடத்திய அரசியல் கட்சியினரால் மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Update: 2024-07-12 12:25 GMT

உசிலம்பட்டி கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு செல்ல முடியால் திரும்பிய அப்பள்ளி மாணவிகள்.

கள்ளர் சீரமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் - பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை பார்வட் ப்ளாக் கட்சியினர் வாசலிலேயே திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி கள்ளர் சீரமைப்புத்துறை மற்றும் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளியுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிராக இன்று தென் மாவட்டங்களில் உள்ள 250க்கும் மேற்பட்ட அரசு கள்ளர் பள்ளிகளில் மாணவ மாணவிகள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என, அனைத்து பார்வட் ப்ளாக் அமைப் பினர்களும் இணைந்து அறிவித் திருந்தனர்.

இந்த சூழலில்  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், இன்று வழக்கம் போல மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களை, போராட்டம் என்ற பெயரில் பார்வட் ப்ளாக் கட்சியினர் தடுத்து நிறுத்தி வாசலிலேயே திருப்பி அனுப்பிய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையினர் அருகில் இருந்தும், மாணவ மாணவிகளின் கல்வியை பாதிக்கும் வகையில் நடந்து கொண்ட பார்வட் ப்ளாக் கட்சியினரை கண்டு கொள்ளாமல், இருந்ததுடன் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு அளித்து பள்ளிக்குள் அனுப்பி வைக்கப்படாத அவல நிலை ஏற்பட்டு,மாணவ மாணவிகள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News