அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி
சேடபட்டி அருகே அரசின் சார்பில் சாதனைகளை விளக்கி புகைப்படக் கண்காட்சி;
மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், உட்பட்ட துள்ளுக்குட்டிநாயக்கனூர் கிருஷ்ணாபுரத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் திட்டம் சாதனை மற்றும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து சிறு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். அருகில் ஊராட்சி மன்ற தலைவர் இ. ஜெயமாலா தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.எஸ். சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். பி.ஆர்.ஒ. சாலிதளபதி, ஏ.பி.ஆர் .ஒ. வி. விநோத், செய்தி மக்கள் தொடர்புத் துறையைச் சேர்ந்த ராஜ்குமார், சக்திவேல் ஆகியோர், புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை, மதுரை செய்தி மக்கள் தொடர்புத் துறையினர் செய்திருந்தனர்.