பேபி அணையை பலப்படுத்த வேண்டும் : தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி...!

Update: 2024-07-06 10:17 GMT
செய்தியாளர்களை சந்தித்த எம்.பி.,தங்க தமிழ்செல்வன் 

பேபி அணையை பலப்படுத்தி முல்லை பெரியாறு அணையில் 152 அடி தேக்க பாடுபடுவேன் என, உசிலம்பட்டியில் தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார்.

உசிலம்பட்டி :

தேனி மக்களவைத் தொகுதியின் வெற்றிக்காக உழைத்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி திமுக நகர, வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றிய கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து, நிர்வாகிகளும் தங்கதமிழ்ச்செல்வனுக்கு, மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், 


'உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, போடி தொகுதியில் புறவழிச்சாலை மற்றும் நெடுஞ்சாலை அமைத்து தர வேண்டும் என, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போதே நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி - யை சந்திக்க அனுமதி பெற்று கோரிக்கை மனுவை வழங்கியுள்ளேன். அவரும் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் இந்த சாலைகள் வந்தால் நிச்சயமாக நிதி ஒதுக்கி நெடுஞ்சாலை அமைத்து தருவதாக தகவல் அளித்துள்ளார் எனவும், எனது காலகட்டத்திற்குள் புறவழிச் சாலை மற்றும் நெடுஞ்சாலையை நிச்சயமாக கொண்டு வருவேன் என்று கூறினார். 

மேலும், பேபி அணையை பலப் படுத்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி கொடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வந்த பின் சிறிய மரங்கள் தான் அதை வெட்டி விட்டு பேபி அணையை பலப்படுத்தினால் 152 அடி தேக்கலாம்.  முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லி, ஒன்றிய அரசிடமும், கேரள அரசிடமும் பேசி சுமூகமான தீர்வு ஏற்பட உதவி செய்வேன்.  பேபி அணையை பலப்படுத்தி முல்லை பெரியாறு அணையில் 152 அடி தேக்க பாடுபடுவேன்' என பேட்டியளித்தார்.

Similar News