மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம் - நடிகர் தாமு
மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம் என திரைப்பட நடிகர் தாமு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கோவில்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த மரு தோதய ஈஸ்வரமுடையார் கோவிலில் திரைப்பட நடிகர் தாமு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவில் வரலாற்றை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தாமு, கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், இதற்கு விசேஷச சக்தி உள்ளது. இந்த சக்தியை மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த கோவில், பிரதோஷத்திற்கு சிறப்பு வாய்ந்தது என்றும், இப்பகுதி மக்கள் கோவிலில் வழிபட்டு புனிதம் காக்க வேண்டும் என் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு அறிவை மேம்படுத்த நீட் தேர்வு அவசியம் என்றும், தமிழக அரசு சிதிலமடைந்த கோவில்களை புனரமைப்பு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதில், கோவில் நிர்வாகிகள் பிரதோஷ கமிட்டியினர் கலந்து கொண்டனர்.