அன்னை தெரசா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா: பெற்றோர்களுக்கு அனுமதி மறுப்பு

பட்டமளிப்பு விழாவில் அடுத்த ஆண்டிலாவது பெற்றோர்களை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்

Update: 2021-12-17 06:30 GMT

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் இருபத்தி ஒன்பதாவது ஆண்டு பட்டமளிப்பு விழா, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள மு.வ. அரங்கில் நடைபெற்றது.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இருபத்தி ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 18,000 மாணவிகளுக்கு பட்டங்களை, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வழங்கி மாணவிகளுக்கு வாழ்த்துக்களை கூறினார்.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் இருபத்தி ஒன்பதாவது ஆண்டு பட்டமளிப்பு விழா, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள மு.வ. அரங்கில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர் .என். ரவி தலைமை வகித்து விழா பேருரை ஆற்றினார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாழ்த்துரை வழங்கினார்.

திருப்பதி பெண்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜமுனா பட்டமளிப்பு விழா உரை ஆற்றினார்.இந்த பட்டமளிப்பு விழாவில் ,549 பேர்கள் நேரடியாக பட்டங்கள் வழங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடை பெறாத காரணத்தினால் 18000 மாணவியர்கள் பட்டங்களை பெற்றார்கள்.145 பேர்கள் டாக்டர் பட்டங்கள் பெற்றார்கள்.845 மாணவிகள் எம்பில் பட்டமும், 3042 பேர்கள் முதுகலைப் பட்டமும், 11 ஆயிரத்து 210 பேர்கள் இளங்கலை பட்டமும், 2378 பேர்கள் பட்டயம் மற்றும் சான்றிதழ் பெற்றார்கள்.

டாக்டர் பட்டம் பெறும் ஐந்து பேர்களுக்கு வெள்ளிப் பதக்கமும், முதுகலை பட்டம் பெறும் மூவருக்கு தங்கப்பதக்கமும் ,17 பெயர்களுக்கு வெள்ளி பதக்கமும், இளங்கலை பட்டம் பெறுபவர்களில் நான்கு பேர்களுக்கு வெள்ளிப்பதக்கமும் இந்த பட்டமளிப்பு விழாவில் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உடனிருந்தார்., மேலும், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பெற்றோர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க செயல் ஆகும் .மாணவிகள் அனைவரும் இந்த வருத்தத்தோடு பட்டங்களை வாங்கினார்கள். அடுத்த ஆண்டாவது மாணவிகளின் பெற்றோர்களை பல்கலைக்கழகம் அனுமதிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News