போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.
உசிலம்பட்டியில் நடந்த போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.;
உசிலம்பட்டியில் நடைபெற்ற போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
நாட்டுப்புற கலைஞர்கள் பாட்டுப்பாடி கல்லூரி மாணவர்களுடன் உசிலம்பட்டியில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
ஜூன் மாதம் 26ந்தேதி உலக போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களை தடுக்கும் விதமாக அனைத்து பகுதிகளிலும் காவல்துறையின் சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனை முன்பு மதுவை ஒழிப்பது குறித்தும் போதைப்பொருட்களில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வது குறித்தும் கல்லூரி மாணவர்களுடன் பள்ளி மாணவர்கள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாட்டுபுற கலைஞர்களுடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் போலீஸ் டி.எஸ்.பி. நல்லு ஆகியோர் கொடியை அசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் உசிலம்பட்டி முக்கிய சாலையான மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை, பேரையூர் ரோடு ,பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்று போதை ஒழிப்பு குறித்து கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.
போதை பொருளுக்கு எதிராக நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் கலந்து கொண்டது சமூக நலனில் எம்.எல்.ஏ. விற்கு இருந்த அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.